பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,கருப்பை தொடர்பான பாதிப்பு இருப்பதை போல் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை,குறைந்த விந்து வெளியேறுதல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இதனால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே ஆண்களுக்கு ஆண்மை தொடர்பான பாதிப்புகள் சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.
தேவையான பொருட்கள்:
1)பேரிச்சம் பழ விதை
2)தேன்
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:
ஒரு கப் பேரிச்சம் பழ விதையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் அரைத்த பேரிச்சம் பழ பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
தினமும் டீ காபிக்கு பதில் பேரிச்சம் பழ விதையில் செய்யப்பட்ட பானத்தை குடித்து வந்தால் உடல் கட்டுக்குள் இருக்கும்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட பேரிச்சம் பழ விதையில் காபி செய்து குடிக்கலாம்.தினமும் இந்த காபி குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.பேரிச்சம் பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துள்ள ஆண்களுக்கு பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.