ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல செயல்பாடுகள் தமிழகத்தையே புரட்டி போட வைத்துள்ளது. விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பால் விலை உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த அடிகளை பாமர மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்கு முறையில் சீர்படுத்துதல் தற்பொழுது மண் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு கூறியதும் மக்களுக்கு பல கேள்விகள் இருந்தது. ஒருவர் பெயரில் 10 மின் இணைப்புகள் இருந்தால் அவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காதா என்று ஒரு அச்சம் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விரிவான முறையில் விளக்கி உள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், தற்பொழுது வரை 15 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதேபோல ஒரு 31 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும். இந்த 31ம் தேதியின் நடுவில் வரும் பண்டிகைகளை தவிர்த்து இதர நாட்களில் ஆதாரம் இணைக்கும் பணி நடைபெறும். அதேபோல அரசு மானியம் கொடுக்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடிசைகள் அல்லது முன்பே வழங்கப்பட்டு வரும் நூறு யூனிட் இலவச மின்சாரம் என அனைவருக்கும் எந்த ஒரு பாகுபாடு இன்றி இலவச மானிய மின்சாரம் வழங்கப்படும்.
ஒரே பெயரில் 10 இணைப்புகள் இருந்தாலும் கூட அவர் அவர்களுக்கு இலவச மானிய மின்சாரம் கிடைக்கும். அதேபோல தற்பொழுது வரை எத்தனை லட்சம் பேர் சொந்த வீட்டில் வாடகை வீட்டிலும் இருக்கிறார்கள் என்ற ஒரு கணக்கு மின்வாரியத்தில் காணப்படவில்லை. தற்பொழுது வரை ஒரு கோடி 15 லட்சம் மின் நுகர்வோர்களின் பட்டியல் மட்டும் தான் உள்ளது. அதுமட்டுமின்றி தற்பொழுது மின்வாரியம் 1.59 லட்சம் கோடி கடலில் இருக்கிறது.
இதனை சரி செய்யவும் மின்வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இவ்வாறு ஆதாரம் இணைப்பது அவசியம்.