தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

0
89

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் நேரம் ஆனது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை விட குறைந்த நேரத்தில் செயல்பட்டாலும் வருமானத்தில் முதலிடத்திலேயே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர்.

ஒரு பக்கம் பூரணம் மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் தற்பொழுது வரை போராடி வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு வருமானமே இந்த டாஸ்மாக்கில் தான் என்பது ஆணித்தனமான உண்மை.

இதனின் நேரத்தை மாற்றம் செய்ய முடியுமே தவிர இதனை பூரண மதுவிலக்கு செய்ய இயலாது. அந்த வகையில் உயர் நீதிமன்றத்தில் இருவர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 21 வயதிற்கும் கீழுள்ள நபர்கள் பிளாக்கில் மதுபானம் விற்று வருகின்றனர்.

இதனை தடை செய்ய புதிய விதிகள் போட வேண்டும் என்று கூறியிருந்தனர். வழக்கான ஏற்ற விசாரணைக்கு வந்தது. தமிழகம் சார்பில் அரசு வக்கீல் ஆஜராகி உள்ளார். அதில் முதலாவதாக மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக அளவு வருவாய் இந்த டாஸ்மாக் ஈட்டுகிறது. அந்த வகையில் ஏன் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் மதுபான கடைகள் இயங்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு வக்கீல் கூறியதாவது, அதிகளவு விதிமுறைகளை நாம் போடுவதால் இங்கு உள்ளவர்கள் மாற்று வழியை சிந்திக்கின்றனர். அந்த வகையில் நாம் கொரோனா காலகட்டத்தில் மதுபான கடைகளை திறக்காததால் தான் பலரும் அண்டை மாநிலங்களில் உள்ள மதுக்களை வாங்கி வந்தனர்.

அச்சமயத்தில் இது குறித்து பல வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மது விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், தற்பொழுது வரை தமிழக அரசு 21 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க எந்தெந்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது மற்றும் அரசுக்கு எவ்வாறான பரிந்துரைகள் வந்தது என்பதை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.