ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Photo of author

By Anand

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Anand

Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 

மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் சவுகான் அறிவித்துள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்கும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

 

நர்மதாபுரம் நகரில் உள்ள நர்மதா நதிக்கரையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இது குறித்து பேசும் போது, “ஐந்தாண்டுகளில் எழை பெண்களுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படும் என்று கூறினார். மேலும் மற்ற நலத்திட்டங்களின் பலன்களைப் பெற்றிருந்தாலும், அனைத்து பிரிவைச்சேர்ந்த ஏழை பெண்களும் இந்த திட்டத்தின் மூலமாக பயனடையலாம் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.