ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!
தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தது. ஆனால் திமுகவானது அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி வந்த நிலையில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார்.
மேலும் இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் அளவில் பலமுறை ஆலோசனை நடத்தினர்கள் . பொருளாதார ஆலோசனை குழு உடன் கலந்து பேசினார்கள். இதில் குடும்ப தலைவிகளுக்கு இந்த ஆண்டு மாதம் திட்டத்தை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.
மேலும் இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் ஏஜென்சியால் தமிழகத்தில் வறுமைக்கோட்டில் உள்ள ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் குடும்பத் தலைவிகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட்டிருந்தது. கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர் பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளது என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய் என்ற அந்தயோதயா அண்ணா யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ஆயிரம் கிடைக்கும்.
மேலும் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் தகுதியானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது.