ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை!

Photo of author

By Rupa

ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை!

மக்களின் தேவைகளை நிறைவேற்றவே  அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பல சமயங்களில் அதனை மறந்து அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் செஞ்சய்யா, இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் பசவையா என்ற மகன் உள்ளான். அவரது மகன் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில்ம் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்தோடு தங்களது சொந்த நிலத்திலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாயம் செய்து கொண்டிருந்த வேளையில் இவரது மகன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென்று அங்கு வந்த பாம்பு அவரது மகனை கடித்தது. இதை அறிந்த அவரது தந்தை உடனடியாக சுகாதார மையத்திற்கு தூக்கி சென்றுள்ளார். தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட போதிலும் அவரது மகனை காப்பாற்ற இயலவில்லை. இதனையடுத்து அவரது மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டது. மேலும் அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் கூப்பிட்டுள்ளார். ஆனால் அவரது மகன் உடலை ஏற்றி செல்ல யாரும் முன் வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மகனை தனது தோளின் மீது சுமந்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். பாம்பு கடித்து சிறுவன் இறந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.