108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! 

Photo of author

By Rupa

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு!
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே இராமானுஜர் கூடத்தில் 108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு  தேனி மாவட்ட துணைச் செயலாளர் அழகுராஜா  தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் , தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும்  1300க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்பாட்டில் இருந்து வருகிறது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 108ஆம்புலன்ஸ் சேவையை  கூடுதலாக இயக்காமல் ஒரு இடத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் சேவையை  வேறு ஒரு புதிய இடத்திற்கு எடுத்துச் சென்று அதனை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த முறையை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு பேறுகால விடுப்பு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பும் காலம் வரையிலும் அந்த விபத்திற்கான நாட்களுக்கும் சேர்த்து சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் தற்காலிக பணியிட மாறுதல் கொள்கை, வார  விடுமுறை,மாதாந்திர சம்பள தேதி, பணியிட நிர்ணயித்தல் பணியின் தன்மை ஆகியவற்றை தன்னிச்சையாக முடிவு செய்து தொழிற் சங்கத்திடம் சட்டப்படி கலந்து பேசி  நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகளை கடைப் பிடிக்காமல் தானாக சட்டவிதிகளை மீறி செயல்படுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். 108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கம்  முன்னணி ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கு எதிராக மாநில தலைமை முன்னெடுக்கும் சட்ட,அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக  தெரிவித்தனர்.இந்த மாநாட்டில் தேனி மாவட்ட பொருளாளர் மாரிச்சாமி திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சுரேஷ் மதுரை மாவட்ட பொருளாளர் பால்பாண்டி ,  மதுரை மண்டல குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.