வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! இத்தனை சதவீதம் தேர்ச்சியா?
தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது.
தற்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 91.39 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.16% மாணவிகள் 94.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.இதன் தேர்ச்சி விகிதம் 97.67% ஆகும். இரண்டாவதாக சிவகங்கை(97.53%) மாவட்டமும், மூன்றாவதாக விருதுநகர் (96.22%) மாவட்டமும் பெற்றுள்ளது.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24% ஆகும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971மாணவ மாணவிகள் தோல்வி அடைத்துள்ளனர். இந்த பொதுத்தேர்வில் மாற்றுதிறனாளிகள் 89.77% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த தேர்வினை 264 சிறைவாசிகள் எழுதி இருந்தனர் அதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதியம் 2 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.