எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

Photo of author

By Kowsalya

பத்தாம் வகுப்பு சான்றிதழ் மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கினால் பிற்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர்.

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் அடுத்து பதினொன்றாம் வகுப்புக்காண சேர்க்கையும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிற்கு மற்றும் டிப்ளமோ படிப்பில் சேர அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் ஒரு அடிப்படையான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டு இருக்காது என நேற்று கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறினார்.

இதன் விளைவாய் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் பயம் கொள்கின்றனர். எதிர்காலத்தில் இந்த கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிடும் என அனைவரும் அச்சம் கொள்கின்றனர்.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து வேறு ஒரு படிப்பிற்காக சேர்வதில்லை. பாதிப்பேர் பத்தாம் வகுப்பு வரை பாதியில் விட்டு விடுகின்றனர். 11, 12ஆம் வகுப்பு வரையிலும் கூட பாதிப்பேர் ஏதோ ஒரு சூழ்நிலையில் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒருவர் பணிக்கு சேர விரும்பினால் அவரது வேலை வாய்ப்பு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும். எதைவைத்து அவர்கள் மற்ற அரசு தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகளை எழுதுவார்கள் என பயம் ஏற்பட்டுள்ளது.

மற்ற அரசு தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தான் கல்வி தகுதியாக உள்ளது. ரயில்வே துறை, உணவுத்துறை, குரூப் 4, கிராம உதவியாளர் ஆகிய அனைத்து மணிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானதாகும். எனவே, 10ம் வகுப்புக்கு மதிப்பெண்களே இன்றி, தற்போது சான்றிதழ் வழங்கினால், தற்போதைய மாணவர்கள், மற்ற கல்வி ஆண்டு மாணவர்களுடன் போட்டியிட்டு, வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை உருவாகும் என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

இதை ஆலோசித்து அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.