10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Gayathri

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

 

வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் 1982 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மூலம் தொடங்கப்பட்டது. இதன் நன்மையின் காரணமாக அதன் பின் வந்த அரசுகளும் அதனை தொடர்ந்தன.

 

முதன் முதலில், ஐயா காமராசர் அவர்கள் இந்த திட்டத்தினை 1955, ஆலோசித்து எட்டயபுரத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது அவர் பேசியதாவது :-

 

” அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்” .

 

சமையல் உதவியாளர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் ஊதிய விவரம் :-

 

தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

பணிக்கு தேர்வு செய்ய படுபவர் சரியாக 12 மாதங்ளுக்குப் பணி புரியும் பட்ச்சத்தில் சிறப்பு காலமுறை ஊதியமும் தனியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சிறப்புக் கால முறை ஊதியமாக 3000 முதல் 9000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.