10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

Photo of author

By Divya

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

காலியிடங்கள்: மொத்தம் 2,409

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது.இதையடுத்து தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 24க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://rrccr.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 28-09-2023