சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

0
98

37 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் குட்டி ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறது. இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நாட்டில் அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வந்து செல்வார்கள். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் தான் குடௌரி.

 

இந்த குடௌரி ரிசார்ட்டில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதற்கிடையே அவர்களில் 11 பேர் இந்தியர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை ஜார்ஜியா நாட்டிற்கான இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இதுகுறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது :-

 

ஜார்ஜியாவின் குடாரியில் 11 இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த செய்தியை அறிந்து இந்தியத் தூதரகம் வருத்தமடைகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

உயிரிழந்தோரின் உடல்களைத் தாயகம் அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எடுத்து வருகிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏனென்றால் இவர்களின் படுக்கை அறைக்கு மிக அருகிலேயே ஜெனரேட்டர் ஒன்று இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 13 மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு அது இயங்க தொடங்கியது. இதனால் ஏற்பட்ட வாயு லீக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Previous articleகவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன்!! உண்மையை உடைத்த பிஸ்மி!!
Next articlePF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!