இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!..

0
153
Controversy broke out because the veil was not worn in this advertisement! The government of Iran has banned acting!
Controversy broke out because the veil was not worn in this advertisement! The government of Iran has banned acting!

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!..

ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி இன்று நடந்தது.அதன் பிறகு அந்நாட்டில் பெண்கள் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொது இடங்களில் முக்காட்டை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் இந்த செயலை செய்து வருகினறனர்.அவர்களில் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் தற்பொழுது வெளியான ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்று சர்ச்சையை மற்றும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானைச் சேர்ந்த ஐஸ்கிரீம் நிறுவனம் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.அதில் ஒன்றான இந்த டோமினோ நிறுவனம் தனது நிறுவனத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்ல பல விளம்பரங்களை மக்களுக்கு பகிர்ந்து வருகிறது .அதன் அடிப்படையில் தான் இரண்டு விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டது.

அதில் ஒரு பெண் சற்று தளர்வாக முக்காடு அணிந்தபடி ஐஸ்கிரீமை கடிப்பது போன்றும் மற்றும் மற்றொரு விளம்பரத்தில் ஐஸ்கிரீம் நிறத்திற்கு ஏற்றவாறு அந்த பெண்ணின் உடை அலங்காரம் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் ஈரானின் பொது கண்ணியத்திற்கு எதிரானது என்றும் பெண்களின் மதிப்புகளை அவமதிப்பதாக இருப்பதாகவும் ஈரானிய அரசு கூறியிருந்தது.

இது குறித்து ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் அந்நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முக்காடு மற்றும் கற்பு விதிகளை அவமதித்த காரணத்தால் பெண்கள் இனி விளம்பரங்களில் நடிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவு கலாச்சார புரட்சியின் சுப்ரீம் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகளுக்குள் அடங்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக விளம்படங்கள் தொடர்பான ஈரான் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடை பொருந்தும் என்றும் இதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களை கருவிகளாக உபயோகிப்பதை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்! வெளுத்து வாங்கிய பயணிகள்!
Next articleகடமலைக்குண்டு காவல்துறை சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!