இந்திய விமான நிலைய ஆணையத்தில் 119 காலிப்பணியிடங்கள்..! மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!

0
231
#image_title

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 119 காலிப்பணியிடங்கள்..! மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!

இந்திய விமான நிலைய ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் 26 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்திய விமான நிலையம்

பதவி: ஜூனியர் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கென மொத்தம் 119 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: ஜனவரி 26 ஆகும்.

விண்ணப்பிக்கும் வழி: ஆன்லைன் வழி

ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/en/recruitment/release என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.