11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!!

0
94
11th and 12th Class Students Exam Date Notification!!
11th and 12th Class Students Exam Date Notification!!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கக உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 11-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

Previous articleடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு!!
Next articleஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!