போதைக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு மாணவன்!..போலீசாரின் அறிவுரையால் மனம் மாறி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற தருணம்!..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்.இவர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார். அதன்பின் கடந்த ஒருவருடமாக பள்ளிக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாவுள்ளார்.கடந்த வாரம் மதுபோதையில் அந்த வாலிபர் பொதுவெளி சாலையில் பயங்கர தகராறில் ஈடுபட்டு வந்தார்.சாலையில் செல்லும் பெண்கள் ஆண்கள் என அனைவரையும் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை பார்த்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் உடனடியாக அந்த வாலிபர் மற்றும் அவர் பெற்றோரை நேரில் அழைத்து மனம்திருந்த செய்ய பல மணி நேரம் அறிவுரைகள் வழங்கினார். மேலும் அந்த வாலிபரை 11 ஆம் வகுப்பில் சேர்க்க தேவையான அனைத்து பொருளுதவிகளும், பண உதவிகளும் செய்து மாவட்ட கல்வி அலுவலருடன் கலந்தாலோசனை செய்தார்.
பின்னர் அவரைபள்ளியில் சேர்க்கை நடவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வேளாண்மை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். மது போதையில் தகராறில் ஈடுபட்ட மாணவன் மனம் திருந்தி ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றார். கல்வி கற்க ஏற்பாடு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.மாணவனின் பெற்றோர்கள் அவருக்கு கண்கலங்கி நன்றி தெரிவித்தனர்.