12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Divya

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!!

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்முடைய ராசிப்படி நம்முடைய குணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்:-

1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களிடம் சண்டையிட்டு
வெற்றிபெற முடியாது. இவர்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். இவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் எவ்வித பிரச்சனையையும் சாதூர்யமாக சமாளிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிகார உச்சம் அடைபவர்கள். இவர்களுக்கு கோபமே முதல் எதிரி.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் அனைவரையும் எளிதில் நம்பி விடுவார்கள். துணிச்சல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் பெரிதாக எதிலும் கவனமுடன் செயல்படுவார்கள். வெற்றியிலும் துவன்வது கிடையாது.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களின் நட்பு கிடைத்தால் அதிர்ஷ்டம் தான். இவர்கள் நேர்முக சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களை அன்பு சொற்களால் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் மரியாதை மிக்கவர்களாக இருப்பார்கள்.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களின் ஜால வார்த்தைகளால் உங்களை வசியப்படுத்த முடியும். இவர்கள் பேச்சில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் வெற்றியின் உச்சத்தை அடைய கடினமாக உழைப்பார்கள். இவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள்.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் நியாயம், நேர்மை இவற்றில் பிரியமானவர்களாக இருப்பார்கள். பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தருபவர்களாக இருப்பார்கள்.