கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!..
கடந்த சில மாதங்களாக பருவமழை ஓயாமல் கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல வீடுகள் நீரினால் மூழ்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆலப்புழா, கோட்டையம், ஏர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு,வயநாடு, மற்றும் கண்ணூர் போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி ,திருச்சூர் ,பாலக்காடு, மலப்புறம் ,கோழிக்காடு ,வயநாடு ,கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே மண் சரிந்து விழுகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். தொடர்ந்து மழை காரணமாக நேற்று மட்டும் ஐந்து பேர் இதனால் உயிரிழந்தார்கள்.மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.