தமிழகத்தில் இன்று (ஜூலை 16) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு எழுதிய மாணவ,
மாணவிகளில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.8,42,512 மாணவ, மாணவியர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.கொரோனா பாதிப்பு காரணமாக சில தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள இயலாததால் அவர்களுக்கு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்த நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்கள் 89.41 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.