வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

0
311

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

புதுக்கோட்டை அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் அரையாண்டு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் அம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியை கொல்லும் விஷத்தை சாப்பிட்ட பலரும் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.அந்த வகையான விஷம் சாப்பிட்ட யாரும் உயிர் பிழைத்ததில்லை.

இதன் காரணமாக இந்த வகையான எலி மருந்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
ஆனாலும் கூட தற்போது வரை இந்த எலி மருந்தானது பிரத்தியேக பூச்சிக்கொல்லி மருந்து கடைகள் முதல் பெட்டிக்கடை வரை எளிமையாக கிடைக்க கூடிய ஓர் பொருளாகவே உள்ளது.
இப்பேற்பட்ட இந்த தடை செய்யப்பட்ட மருந்தை சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவதுஅன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளி முகமது அப்பாஸ். இவரது மகன் முகமது ஹனீப், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படித்து வந்துள்ளார்.ஹனிப் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவன் ஆவான்.இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடித்து கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் சக மாணவர்களுடன் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்றான். திங்கட்கிழமையன்று அரையாண்டு விடைத்தாள்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த மாணவன் 600 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
அவர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் சற்று சோகமாக இருந்துள்ளார்.பள்ளி முடிந்த பின் சக நண்பர்களுடன் பேருந்து நிலையத்திற்கு செல்லும் ஹனிப் திங்கட்கிழமையன்று நண்பர்களுடன் செல்லாமல் தனியாக சென்றுள்ளார்.

ஆனால் பேருந்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து உள்ளார்.பேருந்தில் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவனுக்கு நெஞ்சு எரிச்சல்,வயிற்று வலி,மயக்கம் வருவதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளான்.அவனது நண்பர்கள்,அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை நிறுத்தி இறங்கி கூட்டிச் சென்றுள்ளனர்.

அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது மாணவன் எலி விஷத்தை சாப்பிட்டது.அன்னவாசலில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்பு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்து மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் மாணவன் அங்கு கொண்டு செல்லப்பட்டான்.மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு குடலில் விஷம் ஒட்டி உள்ளது எனக் கூறினர்.எனவே மாணவனை திருச்சியில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் மாணவனை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.

அதாவது பள்ளி முடிந்து சக நண்பர்களுடன் மாணவர்கள் வராமல் மதிப்பெண் குறைந்ததை நினைத்து தனியாக வந்து பேருந்து நிலையம் செல்லும் முன்பே ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள பூச்சி மருந்து கடையில் 20 ரூபாய்க்கு எலி விஷம் வாங்கி அங்கேயே சாப்பிட்டு தண்ணீர் தண்ணீர் குடித்துவிட்டு பேருந்து ஏறியது தெரியவந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் இந்த விஷம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி சீருடையில் வந்த மாணவனுக்கு எப்படி விஷம் விற்றார்கள்? மனித உயிர்களை விட 10 மற்றும் 20 ரூபாய் முக்கியமாகிவிட்டதா இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறவினர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்காமல் இருப்பது பெரிதும் வேதனை அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த மருந்து விற்பனையால் எத்தனை உயிர்கள் போக போகிறதோ என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!
Next articleபன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!