அன்றாட வாழ்வில் அனைவருக்கும் பயன்படும் 12 பயனுள்ள இயற்கை வைத்திய குறிப்புகள்!!

Photo of author

By Divya

அன்றாட வாழ்வில் அனைவருக்கும் பயன்படும் 12 பயனுள்ள இயற்கை வைத்திய குறிப்புகள்!!

Divya

12 Useful Natural Remedies Tips for Everyone in Daily Life!!

1.தோல் அரிப்பு

ஒரு கைப்பிடி இலுப்பை பூவை தண்ணீர்விட்டு அரைத்து காய்ச்சி சருமத்தில் அரிப்பு உண்டான இடத்தில் தடவி வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.

2.கருவேல முள் வெளியேற

அம்மான் பச்சரிசி செடியின் இலையை கிள்ளினால் பால் வரும்.அந்த பாலை முள் குத்திய இடத்தில் தடவினால் அவை எளிதில் வெளியேறிவிடும்.

3.பித்த வெடிப்பு

வேப்ப இலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மஞ்சள் கலந்து பாதங்களில் பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

4.கழுத்து வலி

தேங்காய் எண்ணெயில் இரண்டு ஆடாதோடை இலையை போட்டு காய்ச்சி ஆறவைத்து கழுத்து பகுதியில் தடவி வந்தால் வலி குணமாகும்.

5.மூட்டு வீக்கம்

அத்தி காயில் கிடைக்கும் பாலை மூட்டுகள் மீது அப்ளை செய்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் வலி குணமாகும்.

6.இரத்த சர்க்கரை அளவு குறைய

ஒரு கப் நீரில் இரண்டு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

7.நரம்பு வலுப்பெற

கொத்து அவரை காயை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் நரம்புகள் வலிமையாக இருக்கும்.

8.தலைவலி

முள்ளங்கியை பொடியாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து பருகினால் தலைவலி நீங்கும்.

9.தொண்டை புண்

மிளகை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் தொண்டை புண் குணமாகும்.

10.இரத்த சோகை

முருங்கை கீரை,மிளகு,பூண்டு ஆகிய மூன்றையும் சேர்த்து சூப் செய்து பருகி வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.

11.இருமல்

கடுக்காய் பொடி மற்றும் திப்பிலி பொடி ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

12.ஆஸ்துமா

தூதுவளை பூவை பசும் பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் ஆஸ்துமா பாதிப்பு சரியாகும்.