பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

Photo of author

By Janani

பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

Janani

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார்.

அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பயந்து போன சிறுமி தனது வீட்டில் இருந்து 3 லட்சத்தையும், பின்னர் ₹ 2 லட்சத்தையும் திருடி அவரிடம் கொடுத்துள்ளார். மிரட்டல் தொடரவே அந்த சிறுமியும் அவரது சொந்த வீட்டிலேயே திருட தொடங்கியுள்ளார். வீட்டில் உள்ள நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அந்த சிறுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தன்னை நிர்வாணமாகபடம் எடுத்து அமான் மிரட்டுவதாகவும் பணம் தரவில்லை எனில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து, அமான் மீது போக்சோ , பாலியல் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். குழந்தைகள் வெளியில் யாருடன் பழகுகிறார்கள் என்பதை பெற்றோரிடம் மறைக்காமல் தெரிவித்து வந்தால் இது போன்ற சிக்கல்களில் மாட்டி கொள்ளாமல் தப்பிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.