மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!!
நாம் இரவு நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் இதற்கு பல்வேறு நபர்கள் காரணமாக உள்ளனர். குறிப்பாக காவல்துறை நமக்கு கொடுக்கும் பாதுகாப்பை அடுத்து எல்லையில் இராணுவ வீரர்கள் என அனைவரும் மக்களின் நலனுக்காக இரவு பகல் என பாராமல் பெருமளவில் அயராது உழைத்து வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு மக்களை பாதுகாக்கும் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கே சில நேரங்களில் பாதுகாப்பு இருப்பதில்லை. திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் தற்பொழுது காஷ்மீரில் இராணுவ வீரராக பணியாற்றி வரும் சூழலில் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி உதவிடுமாறு வெளியிட்டுள்ள வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, தமிழக டிஜிபி அவர்களுக்கு வணக்கம். எனது பெயர் அவதார் பிரபாகரன், நான் திருவண்ணாமலையை சேர்ந்தவன். தற்பொழுது காஷ்மீரில் இராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தாலுகாவில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவ்வாறு கடை நடத்தி வரும் எனது மனைவியை 120 பேர் சேர்ந்த கும்பல் அரை நிர்வாணமாக்கி தாக்கியதோடு மேற்கொண்டு கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அவ்வாறு 120 பேர் தாக்கியதால் எனது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்பொழுது வரை தனது மனைவியின் நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமின்றி எனது மனைவிக்கு தொடர்ந்து இவ்வாறான நபர்களால் தொல்லை அளித்து வந்ததால் இது குறித்து எனது ராணுவ அதிகாரியிடம் முறையிட்டேன்.
மேற்கொண்டு எனது ராணுவ அதிகாரி திருவண்ணாமலையின் எஸ் பி யிடம் தனிப்பட்ட முறையில் இது குறித்து முறையிட்டார். எஸ் பி இது குறித்து கடிதம் அனுப்புமாறும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் தற்பொழுது வரை எடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தாலும் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அந்த கும்பல் தொடர்ந்து எனது மனைவியை தாக்கி வருகிறது என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேற்கொண்டு அந்த ராணுவ வீரர் மண்டியிட்டு, எங்க குடும்பத்தை தயவுசெய்து காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் நாட்டை காக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லையா என கொந்தளித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தமிழக டிஜிபி பார்வைக்கு எட்டி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.