கடந்த 12ம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த மீட்டிங்கில் சுமார் 12,000 பணியாளர்களை கூகுள் நிறுவனம் வேலை விட்டு நீக்க போவதாக எடுத்த முடிவுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு அளித்துள்ளார்.
மேலும் அந்த சந்திப்பில் இந்தப் பணி நீக்கங்களை இன்னும் மிகவும் சரியாக நிர்வகித்திருக்கக்கூடும் என்ற நிலையில், மேலும் பல விவாதங்கள் பல சிந்தனைகளுக்கு அப்புறமே இந்த மன வருத்தம் தரக்கூடிய முடிவு எடுக்கப்பட்டது என்று சொல்லி உள்ளார்.
கூட்டத்தில், ஒரு ஊழியர், , வளர்ச்சி மற்றும் மன உறுதியின் அடிப்படையில் இந்த முடிவு நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்கிறீர்கள் என கேட்க, அதற்கு சுந்தர் பிச்சை, “மன உறுதியின் மீது தெளிவான பெரிய தாக்கம்” என்றார்.
மேலும், பிச்சை கூறினார், ‘இது கூகுள்ஜிஸ்ட்டில் உள்ள கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களில் இது பிரதிபலிக்கிறது என்றும். எந்த நிறுவனமும் கடந்து செல்வது கடினம் என்றும், கூகுளில், 25 வருடங்களில் இதுபோன்ற ஒரு தருணத்தை நாங்கள் பெற்றதில்லை.’ என்றும் கூறினார்.
மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப 12,000 வேலை பணி நீக்க முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்கால வளர்ச்சிக்கு தன்னை மேலும் அமைப்பை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
‘நாங்கள் செயல்படவில்லை என்றால், அது ஒரு மோசமான முடிவாக இருந்திருக்க கூடும் என்பது தெரிய வந்தது.
இந்த முடிவு மிகவும் கடினமான முடிவாகவே இருந்தது. மேலும் அத்தனை பேருக்கும் உடனடியாக வேலை இழந்த விசயத்தை தெரிவிக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் இதனை கையாண்டு இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.