12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

CineDesk

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது கூடுதலாக 0.54 சதவீதம் அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் ஆண்களை விட பெண்கள் அதிகமாக தேர்ச்சியடைந்தனர்.
இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்தோர் மாணவர்களுக்கான தனித்தேர்வு அடுத்த மாதம் ஜூன் மாதத்தில் 19ஆம் தேதியில் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதற்கிடையே, 12ஆம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, இன்றுமுதல் இணையதளங்கள் வாயிலாக தற்காலிக மதிப்பின் சான்றிதழ் விநியோகப்படும் என அறிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை வழங்கி மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு, தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டியது அவசியம்.
அத்துடன் மதிப்பெண் சான்றிதழில் பள்ளியின் முத்திரை இடம்பெறுவது அவசியம். இதனை காண்பித்து உயர்கல்வி படிப்பில் சேரலாம். கல்லூரி சேர்வதற்காக தான் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே வழங்கப்படும்.