12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டியவர்கள்!! அரசு தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கட்டணங்கள் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்கள் கட்டிவிட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

மாணவர்கள் ரூ.225 மற்றும் ரூ.175 என இரண்டு விதமான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் அல்லாத பிறமொழியில் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி & எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எஸ்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் எம்பிசி வருமான உச்சவரம்பு ஏதுமின்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு மட்டுமின்றி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோர்கள் சம்பாதிக்கும் BC/BCM சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கட்டாயமாக தேர்வுக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வு ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.