பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

0
217
#image_title

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் தேதியும், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான  நீட் தேர்வு 7ம் தேதியும் இருந்தால்,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  குறைவாக மதிப்பெண் பெரும் மாணவர்களால், நீட் தேர்வில் கவனம் செலுத்த முடியாது.

எனவே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு  தேதியை ஒத்திவைக்க வேண்டும்.

நீட் தேர்வு முடிந்த பின்,  பொதுத்தேர்வு முடிவு தேதியை வெளியிட்டால்  மாணவர்கள் பயனுள்ளதாக இருக்கும்.

இல்லையேல் பொதுத்தேர்வு முடிவு கண்டு அவர்களின் கவனம் சிதறுவதோடு, மனக்குழப்பமும் ஏற்படும்.

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முடிவு வெளியிடும் தேதியை ஒத்திவைக்குமாறு, தமிழக அரசிற்கு, ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா?பொது தேர்வு முடிவு வெளியீடும் தேதி மாற்றப்படுமா?  என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

Previous articleதடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்
Next article100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்