மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

0
135

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் சற்று கொரோனா குறைந்து பின் திறக்கப்பட்டது.

இருப்பினும், இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் இழுத்து மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக 2020 -2021 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவே இல்லை. அதனை தமிழக அரசு ரத்து செய்து விட்டது.

இதனை தொடர்ந்து, அவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது பற்றி ஆலோசிக்க ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழுவானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களை உடைய சராசரி மதிப்பெண்கள் 50%.

மேலும், பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் ஒவ்வொரு பாடத்திலும் எழுத்து தேர்வில் இருந்து ஒரு 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு 10 சதவீதம், அதனுடன் அகமதிப்பீடுலிருந்து 20 சதவீதம் மொத்தமாக 30 சதவீதம் என்ற விகிதாசாரத்தில் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் வழங்கும் பணி முடிந்து உள்ளதால், அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என்று தகவல் வந்துள்ளது.

இதன் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வழங்கப் பட்டால், உடனே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இளநிலை படிக்க மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமேகதாது அணை! இன்று டெல்லி செல்கிறது தமிழக அனைத்து கட்சி குழு!
Next articleசஞ்சீவ் சன் டிவிக்கு போறாரா!! இனிமே விஜய் டிவில இவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்களா??