இந்தியா பாகிஸ்தான் போட்டியால் ஸ்தம்பித்த ஹாட்ஸ்டார்… எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

Photo of author

By Vinoth

இந்தியா பாகிஸ்தான் போட்டியால் ஸ்தம்பித்த ஹாட்ஸ்டார்… எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 148 த்ரில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டியைக் காண மைதானத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் குவிந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் போட்டி நடைபெறும் துபாயில் அதிகளவில் வசிப்பதால் மைதானம் ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதுபோல தொலைக்காட்சியிலும் இந்த போட்டி பெரிய அளவில் பார்க்கப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றையும் விட ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை சுமார் 1.3 கோடி பேருக்கு மேல் அந்த தளத்தில் பார்த்துள்ளனர். இதுவரையிலான எந்த வொரு போட்டிக்கும் இவ்வளவு பெரிய அளவில் ரசிர்கள் ஆதரவு இருந்ததில்லை என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி மற்றும் செல்போன்களில் கூட போட்டியை லைவ்வாக பார்க்கலாம் என்பதால் தொலைக்காட்சிகளை விட இணையத்தில் அதிக பேர் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.