13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Photo of author

By Janani

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8ம் வகுப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வயது வித்யாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மும்பையில் 13 வயது சிறுமியை 8ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம், மும்பை மாட்டுங்கா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 13 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்தியா முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த குற்றங்களை தடுக்க பாலியல் கல்வி அவசியம் என தெரிவித்துள்ளனர்.