கேரளாவில் எப்போதையும் விட 135 சதவிகிதம் கூடுதல் மழை! அதிர்ச்சி தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
கடவுளின் தேசம் என்று அனைவராலும் சொல்லப்படும் கேரளா. தற்போது கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து மாநிலமே தத்தளித்து வருகிறது. மேலும் அங்கு கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அப்படி தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி 35 பேர் வரை இறந்துள்ளனர். பல வீடுகள் மண்ணில் புதைந்தன. சில வீடுகள் அப்படியே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதை எல்லாம் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும், மழையின் காரணமாக சரியாக செய்யமுடியவில்லை.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் மட்டும் இந்த மாதத்தில் மட்டும் 135 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 19 ம் தேதி வரை இயல்பான மழையளவு 192.7 மில்லி மீட்டராக இருக்கும் எனவும், ஆனால் நடப்பு ஆண்டு மட்டும் மழையின் அளவு பத்தொன்பது நாட்களில் மட்டும் இவ்வளவு அதிக அளவாக 435.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.