Tuesday, July 1, 2025
Home Breaking News அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

0
2
14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!
14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், பில்லியன்களை மிச்சப்படுத்தவும், பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகளவில் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அமேசான் பணிநீக்கங்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

மும்பை, மார்ச் 18:  செலவுகளைக் குறைப்பதற்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அமேசான் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் பணிநீக்கங்கள் 14,000 பணியிடங்களை நீக்கும், இதனால் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் குறையும் இந்த ஆண்டு தொழில்நுட்பம் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் AI யின் சவால்களை எதிர்கொள்ளவும் லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்து வருகின்றனர்.

இது குறித்து பினான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், அமேசான் வேலை நீக்கம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டு விட்டது இதனால் சுமார் ரெண்டு புள்ளி ஒன்று முதல் மூன்று புள்ளி ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேமிக்க முடியும். இருப்பினும் இந்த பணி நீக்கத்தினால் ஒரு லட்சத்து 5,770 ஊழியர்களில் இருந்து 91 ஊழியர்களாக குறைய நேரிடும். இது மறுசீரமைப்பு செய்ய ஏதுவான ஒன்று எனக் கூறுகின்றனர்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜாஸி மின்வணிக நிறுவனமான அமேசானின் செயல் திறனை மேம்படுத்தவும். ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்கும் ஒரு புத்தியை வெளியிட்டார் அந்த அறிக்கையின் படி 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலாளர்களுக்கு தனிப்பட்ட பங்களிப்பாளர்களை 15 சதவீதம் அதிகரிக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.

மேற்கொண்டு பணி நீக்கம் குறித்து அதிகாரத்துவத்தை குறைக்கவும் செயல்பாடுகளை விரைவு படுத்தவும் உதவும் என அமேசானின் தலைமை நிர்வாகம் கூறியது. அந்த வகையில் அடுத்தாண்டு அமேசான் வேலை குறைப்பானது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதிக்கும் என்று ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டது. இவ்வாறு வேலை குறைப்பால் அதிகப்படியான செலவுகளை தகர்த்த முடியும்.

கோவிட் தொற்று காலத்தில் அமேசான் நிறுவனமானது புதிய நிர்வாகிகளை வேலைக்கு அமர்த்தியது அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கையிருப்பில் வைத்திருந்தது இதுவே 2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது ஒன்று புள்ளி ஆறு மில்லியன் ஆக உயர்ந்தது இது அதிகரித்து வந்த வண்ணம் பணியாளர்களை குறைக்க தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு குறித்து வேலை இழப்புகளை அமேசான் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் எனக் கூறியுள்ளனர்.

Previous articleஎடப்பாடி சொன்ன வார்த்தை.. ஷாக்கான  செங்கோட்டையன்!! சட்டசபையில் நடந்த தரமான சம்பவம்!! 
Next articleஏசியில் உட்கார்ந்து சம்பாரிக்கிறாரு.. வெயில் மழைனு நாங்க தான் கஷ்டப்பட்ரோம்!! இளையராஜாவை தாக்கி பேசிய ரஜினி!!