15 ஐபிஎல் தொடரில் இணையும் 2 புது அணிகள்! இத்தனை கோடிக்கு ஏலமா? வெளிவந்த அதிராப்பூர்வ வெளியீடு!
ஐபிஎல் 14 வது சீசன் இப்பொழுது நடைபெற்று முடிந்தது.அதன் இறுதிப் போட்டி அக்டோபர் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுயது.முதலில் டாஸ்கை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. அதனை அடுத்து சிஎஸ்கே தனது அபார பீல்டிங் கால் ராஜஸ்தான் ராயல்ஸ் டஃப் ஃபைட் கொடுத்தது. அதனையாடுத்து சிஎஸ்கே ஐபிஎல் 14 வது சீசனில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.சிஎஸ்கே வெற்றி அடைந்ததை அடுத்து ரசிகர்கள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஐபிஎல்லில் 15-வது சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் பங்கேற்கும் என்று. தற்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல், பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், டெல்லி ,ஹைதராபாத் 8 அணிகள் தற்போது வரை போட்டியிட்டு வந்தனர். தற்பொழுது கூடுதலாக இரண்டு ஆணிகள் இணைக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் அடுத்த ஐபிஎல் 15ஆம் தொடரில் பங்கேற்கும் என முன்கூட்டியே பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கூடுதலாக இணைக்கப்படும் 2 அணிகளை வாங்குவதற்கான டெண்டர்களை வரவேற்று அதன் அறிவிப்பையும் வெளியிட்டனர்.
மேலும் கூடுதலாக இணையும் புதிய அணிகளை வாங்குவதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதானி குழுமம் ,ஹிந்துஸ்தான் டைம்ஸ், மீடியா ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட நிலையில் நடைபெற்ற ஏலத்தில் ஆரஞ்சு குழுமம் லக்னோ அணியை 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனையடுத்து சிவிசி கேப்டன் அகமதாபாத் அணியை 5624 கோடிக்கு ஏலம் எடுத்தது.அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் பத்து குழு கொண்டு நடைப்பெற இருப்பதால் அதிக சுவாரசியமுடன் காணப்படும்.மேலும் புதிய இரு அணிகள் எந்த விதத்தில் விளையாடுவராகள் என்ற எதிர்பார்ப்பும் தற்போது இருந்தே மக்களிடையே காணப்படுகிறது.