தமிழக அரசு வழங்கும் ரூ.15 லட்சம் கடனுதவி!! யாருக்கு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

0
2
15 lakh loan provided by Tamil Nadu Government!! Who.. knows how to apply!!
15 lakh loan provided by Tamil Nadu Government!! Who.. knows how to apply!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

15 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு முதலில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் குழுவில் அதிகபட்சம் 20 பேருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய் என்பது ஒரு முழு குழுவிற்காகவும் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் 1.5 லட்சம் ரூபாய் அதிகபட்சமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் அவசியம் என அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான முக்கிய சான்றுகள் :-

✓ பிறப்புச் சான்றிதழ்
✓ சாதிச் சான்றிதழ்
✓ வருமானச் சான்றிதழ்
✓ ரேஷன் கார்டு
✓ ஆதார் கார்டு

இந்த ஆவணங்களை கொண்டு தகுதி உடையவர்கள் மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற இடங்களில் விண்ணப்பிக்கும் படியும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மேற்படி தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!
Next articleUPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!