2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

0
188

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

 

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

தேனி மாவட்டத்தை சேர்த்தவர் சிவாஜி. இவர் விவசாயி ஆவார். இவருக்கு உறவினர் மூலமாக பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். விவசாயி சிவாஜி அவர்களும் பாண்டி அவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் பாண்டி என்பவர் விவசாயி சிவாஜியிடம் “ஈரோடு மாவட்டத்தில் தனது நண்பர் ராஜ்குமாரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் உள்ளது. அதில் அவர் தற்பொழுது 50 லட்சம் ரூபாயை மட்டும் மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் இந்த தொகையை மாற்றும் பொழுது 35 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும். 15 லட்சம் ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் என்று பாண்டி என்பவர் விவசாயி சிவாஜியிடம் கூறியுள்ளார். இதை கேட்டு 15 லட்சம் லாபம் கிடைக்கும் என்று நினைத்த சிவாஜி அவர்கள் 35 லட்சம் ரூபாயை கொடுக்க முன்வந்தார்.

 

இதையடுத்து பாண்டி தனது 3 நண்பர்களுடனும் விவசாயி சிவாஜியை அழைத்துக் கொண்டு காரில் தேனியில் இருந்து ஈரோடு புற்றப்பட்டு சொன்றார். ஈரோடு செல்லும் வழியில் இவர்கள் சென்ற காரை காவல்துறை சீருடையில் இருந்த நான்கு பேர் தடுத்து நிறுத்தினர்.

 

பின்னர் அந்த நான்கு பேரும் சிவாஜியிடம் காவல் துறையினர் என்று கூறி அவரிடம் இருந்த 35 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டி என்பவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

 

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறேக தான் ஏமாற்றப்பட்டதை விவசாயி சிவாஜி உணர்ந்துள்ளார். பின்னர் விவசாயி சிவாஜி அவர்கள் நடந்ததை கூறி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

 

காவல் துறையும் விவசாயி சிவாஜி அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலை தேடி வந்தது. இந்நிலையில் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் மோசடி கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்… இன்று இலவசமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்…!
Next articleதிருப்பதி சிறப்பு ரயில்  சேவை இந்த தேதிகளில் ரத்து!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!