தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்!

Photo of author

By Rupa

தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்!

கொரோனா காலக்கட்டத்தில் பெண்கள் வெளியே அதிக அளவு செல்லாத போதிலும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அதிலும் இக்ககாலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களது குழந்தைகள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என கவனிப்பதை தவறவிட்டு விடுகின்றனர்.அந்தவகையில் திருவெற்றியூரில் கவிதா என்ற பெண்மணி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அவர் உபயோகம் செய்யும் தொலைப்பேசியை அவரது 17 வயது மகள் உபயோகப்படுத்தி வந்துள்ளார்.அவரது அம்மாவின் வலைத்தளப்பக்கத்தில் இருந்து ஓர் வாலிபர் நண்பராக அவரது மகளிடம் பழகி வந்துள்ளார்.இது சில காலத்தில் இருவருக்குமிடையே காதலாக மலர்ந்தது.அதன்பின் அந்த சிறுமியை கல்யாணம் செய்து கொள்ளலாம் என அந்த சமூக வலைத்தள வாலிபர் அழைத்துள்ளார்.

அதற்கு அந்த வாலிபர் யார் என்னவென்றும் தெரியாமல் அந்த 17 வயது சிறுமியும் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.அந்த சிறுமியின் தாய் வேலைக்கு சென்று வந்தபின் அவரது பார்த்தபோது மகளை வீட்டினுள் காணவில்லை. அதன்பின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  செய்தார்.போலீசார் அந்த சிறுமியை கிரிஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மீட்டனர்.அதன்பின் அந்த வாலிபரை கைது செய்தனர்.

இரண்டாவது சம்பவம்:

சென்னை மாதவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.அந்த சிறுமி கடைக்கு சென்றபோது மாத்தூர் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் அச்சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளார்.அந்த சிறுமியை காதலிக்கும் படி மிரட்டியுள்ளார்,அந்த சிறுமி அதன்பின் கூச்சலிட்டார்.அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர் ஓடி விட்டார்.அதன்பின் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி முறையிட்டார்.அந்த சிறுமியின் தாய் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.