செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

0
178
#image_title

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 28,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்டவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர்.

கோடை காலத்தை முன்னிட்டு மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஜெயவீரராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைகளிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 140 கடைகளில் சோதனை செய்ததில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த நிலையில் 45 கிலோ திராட்சை பழம், 60 கிலோ தண்ணீர் பழம், மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 18 வாழைத்தார் (420 கிலோ) வாழைப்பழங்கள் உட்பட சுமார் 28,000/- மதிப்புள்ள செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் சேதாரமான பழங்கள் பறிமுதல் செய்து அளித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Previous articleபொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?
Next articleஅதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு