16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Photo of author

By Janani

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Janani

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று பெற்றோர் ஒருவரும் வெளியில் சென்று விட்ட நிலையில், மகள்கள் மட்டும் தனியே இருந்துள்ளனர்.

அப்போது அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். சிறுமிகள் தனியே இருப்பதை கவனித்த அவன் சிறுமிகளில் ஒருவரை தனியே அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளான். அதன்பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.