அலார்ட்! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யவிருக்கும் கனமழை!

0
66

தமிழகத்தில் வளிமண்டலத்தில் உண்டாகும் மாற்றம் காரணமாக, கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை காலமான ஜூன் மாதத்திலிருந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பூமியும் வெகுவாக குளிர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருவாரூர், தேனி, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சென்னையில் இரவு லேசான மழை பெய்த சூழ்நிலையில், தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வால்பாறை தாலுகாவில் இருக்கின்ற பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.