SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Photo of author

By CineDesk

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

Coronavirus

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. அங்குள்ள மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் சக மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து, இருதினங்களுக்கு முன்பு 61 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கும் இரு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Coronavirus

அதுமட்டுமின்றி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 1,729 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமாக 5 மாணவிகளின் பெற்றொருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேருக்கும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.