டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!

Photo of author

By Parthipan K

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!

Parthipan K

Updated on:

16-year-old girl stabbed to death in Delhi, youth arrested!!

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!

டெல்லியில் ஷஹாபாத் பகுதியில் 16  வயது சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்தும் கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு தப்பிய நபரை போலீஸ்சார் வலை வீசி தேடி வந்தனர். காதல் வசப்பட்டு, இவ்விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளியை பிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளியை சிறுமியை கொடூரமாகவும், பலமுறை குத்தியும், வீடியோவும் வெளியாகி உள்ளன. சுற்றியுள்ள மக்கள் வேடிக்கை பார்த்தர்கள் தவிர யாருமே தடுக்க முன் வரவில்லை. அவன் தப்பி ஓடி விட்டான். மேலும் வடக்கு டெல்லி கூடுதல் டிசிபி ராஜா பந்திய கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்ட (சாஹில்) (வயது 20)  குற்றவாளியை பிடிக்க சிறப்பு 6  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அவரது பெற்றோர் ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார். இதனிடையே டிசிடபிள்யூ தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது, 16 வயது சிறுமி 40-50 முறை கத்தியால் குத்தப்பட்டும், பலமுறை கல்லை தூக்கி தலையில் போட்டும் உயிரிழந்தார்.

இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த பலர் செவி சாய்க்கவில்லை. டெல்லி அரசு பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.