துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை!

Photo of author

By Rupa

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை!

இக்காலக்கட்டத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதுடன்,அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளும் நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது.முதலில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.அந்த சம்பவம் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக தற்போது 16 வயது நிரம்பிய சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதி அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளி.இவருக்கு 16 வயசு தக்க பிளஸ்1 படிக்கும் மகள் உள்ளார்.இவருக்கு நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என மாவட்ட நல குழந்தை பாதுகாப்பு குழுவிற்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு நான்கு பேர்களால் பாலியல் வன்கொடுமை நடந்தது தெரிய வந்தது.இதனைக்கேட்ட குழந்தை நல பாதுகாப்பு குழுவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த செய்தியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் புதுச்சத்திரம் காவல் நிலைய போலீசாருக்கும்,மாவட்ட சூப்பிரண்ட் சக்தி கணேஷ் போலீசாருக்கும் இந்த வழக்கை விசாரிக்குமாறு கூறியுள்ளார்.அவர்களின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது,முதலில் ராசிபுரம் தாலுக்கா பட்டணம் பரமேஸ்வர் பகுதியை சேர்ந்த சென்ட்ரிக் தொழிலாளி தமிழ்ச்செல்வன் என்பவர் அந்த பிளஸ்1 மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி,அவரின் உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து தண்ணீர் பந்தல்காட்டை சேர்ந்த சினிமா துணை நடிகர் மோகன்குமார்,காரைக்குறிச்சியை சேர்ந்த பெய்ன்ட் வேலை பார்ப்பவர் கவின்ராஜ் மற்றும் 45 வயதுமிக்க கண்ணையன் ஆகியோரும் அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.இவை அனைத்தும் அந்த விசாரணையில் தெரிய வந்தது.அதற்கடுத்து இந்த நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதில் கண்ணையன் என்பவர் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.