165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

Photo of author

By Rupa

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

மாணவர்களின் மருத்துவ கனவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த நீட் தேர்வு தான்.இரு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மக்களிடம் ஓட்டுகளை கவர்வதற்கு பல அறிக்கைகளை வெளியிட்டது.அந்த அறிக்கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது.தற்போது 170 க்கும் மேல் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சி அமைத்தும் கூறிய இந்த அறிக்கை ஏன் இன்றளவும் நிறைவேற்ற முடியவில்லை? அதாவது நீட் தேர்வு இன்றளவும் ரத்து செய்யப்படவில்லை? இதனை கண்டித்து பலர் கேள்விகளை எழுப்பினர்.

அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது,திமுக அறிக்கை என்னும் பெயரில் கூறிய ,நீட் தேர்வை ரத்து செய்யும் என்பது வெறும் கண்துடைப்பிற்கே என தெரிவித்தார். இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே நீட் தேர்வுக்கான தேதி வெளிவந்தது. அடுத்த மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வானது செப்டம்பர் மாதம் தற்போது நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது.ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஏ.கே.ராஜன் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைத்து நீட் தேர்வு நடத்தப்படுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து ஓர் ஆய்வறிக்கையை சமர்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்த அறிக்கையை சேகரிக்க ஒரு மாத காலத்திற்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.இந்த ஆய்வறிக்கை யானது இன்று முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.ஆய்வறிக்கையில் ஓய்வுபெற்ற ஏ.கே.ராஜன் குழுவிடம் 86 ஆயிரத்து 342 பேர் நீட் தேர்விற்கு நடப்பதற்கு எதிராக கூறியுள்ளனர்.மொத்தமாக 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் முதல்வர் இதனை கண்டு நீட் தேர்வு நடப்பதை ரத்து செய்யக் கோரி மத்திய அரசிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.