தற்சமயம் தமிழகம் எங்கும் மோஸ்ட்லி ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் தான் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடப்பதோடு மட்டுமல்லாமல், க்ரைம்களும், பண மோசடியும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் கிரிமினல்கள் 1673.85 கோடி மோசடி செய்துள்ளனர் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு,
பொதுவாக க்ரைம்கள் ஏற்பட்டால் சைபர் கிரைமின் கட்டணமில்லா சேவை எண்ணான 1930 என்ற உதவி எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டு புகார் அளிக்கலாம். அந்த வகையில், இந்த அழைப்பின் மூலம் மட்டுமே கடந்த ஓராண்டில் 2,68,875 அழைப்புகள் மூலம் நிதி மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.
சைபர் கிரைம் டிபார்ட்மெண்டை தொடர்பு கொள்ளும் மற்றொரு வழியான www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த ஓராண்டில் 1,27,065 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆக மொத்தம் கடந்த ஓராண்டில் மட்டும் சைபர் க்ரைம்களின் புகார்களின் எண்ணிக்கை 3,95,940.
இவற்றுள் 4326 வழக்குகளுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 79,449 புகார்களுக்கு சி.எஸ்.ஆர் (புகார் மனு ஏற்பு ரசீது) வழங்கப்பட்டு விசாரணை நடந்து வருகின்றன. இந்த வழக்குகள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூபாய்களின் மதிப்பு 1673 கோடிக்கு மேல் என்று பதிவாகியுள்ளது. இவற்றுள், மோசடி செய்யப்பட்ட உடனே கம்பளைண்ட் செய்தவர்களின் ரூபாய் மதிப்பு 772 கோடி. இந்த 772 கோடி முடக்கப்பட்டு உள்ளது அதாவது உடனடியாக கம்பளைண்ட் செய்ததனால் இதை அந்த கிரைம் நபர்களின் வசம் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த கிரிமினல்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூபாய் மதிப்பு 83 கோடி. இந்த ரூபாய் மதிப்பானது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சைபர் குற்றவாளிகள் 838 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 34 பேர் மேல் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. டிசம்பர் 6,8 (2024) தேதிகளில் மட்டுமே திசை நீக்கு என்ற சிறப்பு நடைமுறைக்கு வாயிலாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து நடந்து வரும் சைபர் கிரைம்களை தடுக்க சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், குற்றவாளிகள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. (இன்ஸ்டாகிராம், பேஸ்புக், இணையதளங்கள் மற்றும் youtube பக்கங்கள்). மேலும் போலியான இணையதள முகவரிகள், சூதாட்ட ஆப்ஸ்கள் போன்றவற்றையும் முடக்கி உள்ளன. மேலும், இது போன்ற நடவடிக்கைகள் தற்போது க்ரைம்களின் அப்டேட்கள் குறித்து சமூக வலைத்தளம் மூலம் க்ரைம் டிபார்ட்மெண்ட் மக்களுக்கு எடுத்து சொல்ல முன்வந்துள்ளது. இது குறித்து, ஜனவரி 25ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில், மெரினா கடற்கரையில் “1930- சைபர் வாக்கத்தான்” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று சைபர் கிரைம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளவை சைபர் கிரைம் தொடர்பு கொண்ட கம்ப்ளைன்களின் எண்ணிக்கை மட்டுமே. அது இல்லாமல் இன்னும் எத்தனையோ?