IDBI வங்கியில் 18 காலிப்பணியிடங்கள்! மார்ச் 7 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!
இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான IDBI வங்கியில் காலியாக உள்ள “Part Time Bank’s Medical Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.
நிறுவனம்: IDBI
பணி: Part Time Bank’s Medical Officer
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS அல்லது MD படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 07-03-2024