பரபரப்பு! 19 பேர் பலியான பரிதாபம்.

Photo of author

By Parthipan K

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு வாகனம் சென்றுள்ளது. அப்போது திடீரென்று அந்த சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் இயங்காமல் அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுங்கச்சாவடியின் அருகில் இருந்தஅனைத்து கார்களும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அப்பகுதியை சுற்றியிருந்த மக்களும் தீக்காயத்தால் படுகாயமடைந்தார்கள்.

படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது