ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்கின்ற ஊரில் 19 வயது உடைய சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேலி கிண்டல் மற்றும் மிரட்டல் செய்ததால் இந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இறந்து போன பெண் மற்றும் அவரது மூத்த சகோதரி இருவது காலேஜ் போய்க்கொண்டு இருந்துள்ளனர். இவர்களை 21 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. தினமும் அவர்கள் போகும் வழியில் அந்த இரண்டு இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து அவர்களை தொந்தரவு செய்து இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த இளைஞர்கள் மீது ஐபிசி 305 section படி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்து போன பெண்ணின் தந்தை கூறுகையில், அந்த இரண்டு இளைஞர்களும் இந்த இரண்டு பெண்களின் போட்டோக்களை மற்றும் வீடியோக்களை எடிட்டிங் மற்றும் மார்ஃபிங் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி அவர்களுக்கு தொல்லை கொடுத்தனர் என்று அவர் தந்தை கூறியுள்ளார்.
இதனால் மனமடைந்து போன எனது இரண்டாவது மகள் விஷத்தை அருந்தியதாகவும், தகவல் அறிந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை பற்றி போலீஸ் தரப்பார் கூறியது, அந்த இரண்டு குற்றவாளிகளும் பெரிய பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோக்களை எடிட்டிங் மற்றும் மார்ஃபிங் செய்த சமூக வலைதளங்களில் அதை பரப்பப்பட்டிருக்கின்றனர். அதை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளான சிறிய பெண் மனம் முறிந்து விஷம் அருந்தி உயிரை இழந்துள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனை சோதனைக்கு பின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர் என்றும் போலீசாரின் ரிபோட் எழுதியுள்ளார்கள்.