முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!!

0
156
1st generation vs 3rd generation war!! BJP President Annamalai Interview!!
1st generation vs 3rd generation war!! BJP President Annamalai Interview!!

முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!!

தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக உறுப்பினர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தி வைத்திருப்பதாக அவர்களது சொத்து குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டார்.

அந்த பட்டியலில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றி இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி இருந்தார். இதற்கு பதில் கூறும் வகையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கை விசாரிக்க இன்று நீதிமன்றத்திற்கு வரும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது. எனவே, இன்று நீதிமன்றத்திற்கு அண்ணாமலை ஆஜரானார்.

அவருக்கு இங்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதன் பிறகு திரும்ப ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அண்ணாமலை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, எங்களுடைய ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

எனவே, இந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்தில் முதல் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கும் மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கும் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்று வருகிறது.

திமுக-வில் பைல்ஸ் பாகம் இரண்டில் அதிமுகவில் இருந்து திமுக வில் வந்து இணைந்த அமைச்சர்கள் தான் அதிகம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

Previous articleபிரதமர் மோடியால் பல கோடி செலவு!! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!! 
Next articleமத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!!