இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

Photo of author

By Vijay

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

Vijay

தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன .

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அக்டோபர் 4ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. மேலும், தடுப்பூசி 2 டோஸ் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்த கல்லூரி கல்வி இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.