இரண்டு முறை மட்டும் இதனை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் சரி சாதாரண சளியாக இருந்தாலும் சரி குணமாகிவிடும்.
சில பேருக்கு எப்பொழுதும் சளி இருந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமாவினால் பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்சு சளி கட்டிக்கொண்டு வராமல் இருக்கும். கிளைமேட் மாறும் பொழுது சளி வந்த விடும். அவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதற்கு கற்பூரவள்ளி மிகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளியை நாம் அனைவரும் வீட்டில் வளர்க்கிறோம். கற்பூரவள்ளி வெறும் சளிக்கு மட்டும் இல்லாமல், மலச்சிக்கல் மன அழுத்தத்தை குறைக்கும், மூலம் ஆகியவற்றை குறைக்கும். உடல் வலி கை கால் மூட்டு வலி ஆகிய அனைத்திற்கும் கற்பூரவள்ளி மருந்தாக பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலை -4
கல் உப்பு 2
தேன் சிறிதளவு
செய்முறை:
1. நான்கு கற்பூரவள்ளி இலைகளை பறித்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2. அடுப்பில் தவா அல்லது தோசை சட்டியை வைத்து பற்ற வைக்கவும்.
3. தவா சிறிது சூடானவுடன் நான்கு கற்பூரவள்ளி இலைகளை வைத்து லேசாக வதக்கிக் கொள்ளவும். அதிகம் வதக்க வேண்டாம் லேசாக வதக்கவும்.
4. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.
5. கற்பூர இலைகளை நன்றாக கை வைத்து பிழிந்து கொள்ளவும்.
6. நன்கு சாறு வரும், அதனுடன் இரண்டு கல் உப்பை சேர்த்து கலந்து கொள்ளவும்.
7. பின் எந்த அளவு சாறு உள்ளதோ அந்த அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.
8. நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மருந்தை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது உங்களுக்கு எப்படிப்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் வெளிவந்து விடும்.